புற்றுநோயை நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி மதுரை அப்போலோ புற்றுநோய் மருத்துவர்கள் சாதனை

Loading

மதுரையில் நடையெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிமிபாசை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், மதுரையை சேர்ந்த 28 வயது மிக்க இளம் வாலிபர் ஒருவர் உணவு விழுங்க முடியாமல் சீரமப்பட்டார் அவருக்கு அப்போலோ மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் உணவு குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. உணவுக்குழாய் புற்றுநோய்க்கான சிகிச்சையின் போது ‘ஓபன்சர்ஜரி என்னும் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது, நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் அதிக வலி, நுரையீரலில் நோய்த்தொற்று மற்றும் பல சிரமங்கள் ஏற்படுவது சகஜம், அவற்றை தவிர்க்கும் வகையில் இவருக்கு VATS (Video Assisted Thoracoscopic Surgery) எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. இதனால் அறுவைசிகிச்சை முடிந்த அடுத்த நினமே அவர் வலியின்றி மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் தனது அன்றாட வேலைகளை சகஜமாக செய்ய முடிந்தது. மேலும் அறுவை சிகிச்சை செய்த ஒரே வாரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது உணவு குழாய் புற்று நோய் பாதித்தவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் ஆகும்’ என்று கூறினார்.அவர் மேலும் கூறுகையில், மும்முனை சிசிச்சையைப் பயன்படுத்துவதன் மூலம் மருத்துவமனையில் தாங்கியிருக்கும் காலத்தை சுமார் 50% குறைக்கும் மேலும் குனாமடையும் விசிதம் 15% அதிகரிக்கும்புற்றுநோய் மருந்தியல் துறை நிபுணர் டாக்டர் தேவானந்த் பேசுகையில், “புற்று நோய் குறித்த பயமே நோயாளிகள் மருத்துவரை சரியான நேரத்தில் அணுகுவதற்கு தடையாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் கீமோதெரபி எனப்படும் புற்றுநோய் மருந்துகளின் பலன் கூடுதலாக கிடைக்கும், பூரணகுணம் அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால் புற்றுநோய் என்ற சந்தேகம் இருந்தால் புற்று நோய் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது” என்று கூறினார். புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் டாக்டர் சதீஷ் ஸ்ரீனிவாசன் பேசுகையில் ‘உணவு குழாய் புற்றுநோய்க்கு பொதுவாக கறிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதொம்மட்டுமே உபயோகப் படுத்தப்படும். ஆனால் இந்த வாலிபர் பூரண குணமடைய மும்முனை ச்சை (TRIMODALITY THERAPY) அளிப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவர் குழு ஆலோசனைக்கு பின் முடிவு செய்தது. அதன் காரணமாக இவருக்கு நான்கு வாரங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் நுண்துளை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இவரது புற்று நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான மும்முனை சிகிச்சை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பது பாதுகாப்பானது மேலும் மிகவும் எளிதாகி விட்டது” என்று கூறினார். இது குறித்து மருத்துவத்துறை ஜேடிஎம்எஸ் டாக்டர் பிரவின்ராஜன் கூறுகையில், ‘உணவுக்குழாய் புற்றுநோய் என்பது பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப் படுவதில்லை. இதனால் இதற்கான சிகிச்சை பல சமயங்களில் முழுமையாக செய்வதில் சிக்கல்கள் ஏற்படுவது சகஜம், இருப்பினும் நமது மருத்துவர் குழுவின் சிறப்பான சிகிச்சையால் இவர் தற்போது குணமடைந்துள்ளார். மேலும் இரணம் வருடங்கள் வரை இவரது புற்றுநோய் குறித்து கண்காணிப்பு பரிசோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். அப்போலோ நிறுவனததின் மதுரை மண்டல COO நீலகண்ணன் பேசுகையில், “மதுரை அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைகளுக்கான முழுமையான மருத்துவ குழுவின் கண்காணிப்பில் சிறப்பான சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அதிநவீன கருவிகள் மூலம் நோயாளிகள் பயன் அடையும் வகையில் கொண்டு வரப்பட உள்ளன. இதனால் தமிழக புற்று நோயாளிகள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அருகிலேயே பெறமுடியும்” என்று கூறினார்.மேலும் மருத்துவக்கழ நிபுணர்கள் மருத்துவர்கள் Dr TV சேகர், Dr ராஜேஷ் பிரபு, Dr A சுரேஷ்குமார், Dr ஐயப்பன், Dr கணேஷ், Dr பிரவீன் குமார், Dr பிரபு மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே மணிகண்டன், செயல்பாடுகள் பொது மேலாளர் பாக்ட்ர் இக்கில் திவாரி மற்றும் SLM Mr. பிரேம் டேனியல் (புற்றுநோய் பிரிவு) ஆகியோர் நட்டனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *