பெரியார் தொழிலாளர் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார் தொழிலாளர் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பி என் ஸ்ரீதர் இடம் பெரியார் தொழிலாளர் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-  கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கிடையே கஞ்சா மட்டும் போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் இதில் அதிகமாக ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன இதனால் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது எனவே மாணவர்களின் வாழக்கையை சீர்குலைக்கும் கஞ்சா மட்டும் போதை பொருட்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் மாவட்டம் முழுவதும் அரசு சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மேலும் கஞ்சா குட்கா போன்ற பொருட்களின் விற்பனையில் ஈடுப்படும் நபர்கள்  மீது கடுமையான  நடவடிக்கை எடுத்து கஞ்சா குட்கா புகையிலை போன்ற விற்பனையை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதில் கழக தலைவர் நீதிஅரசர்,கழக துணை செயலாளர்  குமரி ரசூல், கழக செயற்குழு உறப்பினர் ராஜன் கழக நாகர்கோவில் மாநகர செயலாளர் சாகுல், ரெவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *