2023 இல் இந்தியாவிலிருந்து சுற்றுலாவுக்காக வருவோரின் எண்ணிக்கையில் 72% அதிகரிப்பை சவுத் ஆப்ரிகன் டூரிசம் இலக்காகக் கொண்டுள்ளது
![]()
இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி 6வது பெரிய சர்வதேச மூல சந்தையாக மாறுகிறது
2025-க்குள் இந்திய சந்தை வளர்ச்சியில் சென்னை அதிகபட்ச பங்கு வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
சென்னை, 16பிப்ரவரி 2023:2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் தலங்களில் ஒன்றாக சவுத் ஆப்ரிக்கா உருவெடுத்துள்ளது.பல்வேறு வகைப்பட்ட,வளமிகு இலக்குகளை வழங்கியதன் மூலம் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து சவுத் ஆப்ரிக்காவை சாகசப் பயணத்திற்கான இடமாகத் தேர்வு செய்ய அதன் வலுவான முன்னெடுப்புகள் மற்றும் மோர் & மோர் பிரச்சாரம் உதவியது. இவ்வளர்ச்சியை மேலும் அதிகரிக்க வேண்டி, இந்தியாவின் முக்கிய நகரங்களான கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் பிப்ரவரி 13 மற்றும் 16 ஆம் தேதிகளுக்கு இடையில் 35 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இணைந்து புதுமையான மற்றும் இதுவரை கண்டிராத வகையிலான சலுகைகளை இந்திய நுகர்வோர் மற்றும் வர்த்தக பங்காளிகளுக்கு சவுத்ஆப்ரிக்கன் டூரிஸம் காட்சிப்படுத்துகிறது.பங்கேற்பு கண்காட்சியாளர்களில் வெஸ்டர்ன் கேப், குவாசுலு-நடால், கௌடெங், லிம்போபோ மற்றும் ஈஸ்டர்ன் கேப் போன்ற முக்கியப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்கேற்பாளர்கள் அடங்குவர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய மற்றும் சவுத் ஆப்பிரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களுக்கு இடையே தற்போதுள்ள வணிக ஒப்பந்தங்களை வலுப்படுத்தியதோடு, வரும்காலத்தில் பயனுள்ள கூட்டாண்மைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது..

