முகமூடி அணிந்து *சார்லஸ் டார்வின் பிறந்தநாள் கொண்டாட்டம்*
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வினின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமானது சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி வரவேற்புரை ஆற்றினார். வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர் ஜெயப்பிரியா மாய எழுத்துக்கள், ஒளியின் பாதை, கார்பன் டை ஆக்ஸைடு உருவாதல், ஒளி விலகல், வளைந்த பென்சில், தண்ணீர் மட்டம் மேலே ஏற்றுதல். திண்மம், திரவம், வாயு பற்றிய அறிவியல் ஆய்வுகளை மாணவர்களுக்கு செய்து காட்டி மாணவர்களையும் அறிவியல் சோதனைகளை செய்து காண்பிக்க வைத்தார்கள் சார்லஸ் டார்வின் பரிணாம கோட்பாடுகள் குறித்து மாணவர்கள் கலந்துரையாடினார்கள். சார்லஸ் டார்வினின் முகமூடி அணிந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள். மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.