பல்நோக்கு சேவை பணியாளர்கள் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

Loading

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களான வல்லம்பேடுகுப்பம், மேட்டுக்குப்பம், புதுக்குப்பம், அவுரிவாக்கம் (கிழக்கு ரூ மேற்கு), குளத்துமேடு, எடமணிக்குப்பம், பசியாவரம், செம்பாசிப்பள்ளிக்குப்பம், லைட்ஹவுஸ் நடுக்குப்பம், கரிமணல், சென்னாவரம், பெரிய ஓபுளாபுரம், நாரசம்பாளையம், குழிநாவல், பள்ளிப்பாளையம், அகரம், தொட்டிமேடு, டாக்டர்.அம்பேத்கார் நகர், எடமணி ஆதிதிராவிடர், செங்கழநீர்மேடு, கடப்பாக்கம், காளாஞ்சி ஆகிய 23 கடலோர மீனவ கிராமங்களில் காலியாக உள்ள 23 பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்களை ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச்; சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 01.07.2022 அன்றைய தேதிபடி வயது 35-க்குள் இருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பத்தினை பின்வரும் முகவரியில் நேரிலோ அல்லது அருகாமையிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.மீன்வள அறிவியல்,கடல் உயிரியல்,மற்றும் விலங்கியல், ஆகிய பிரிவுகளில் முதுகலை,இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல்,வேதியியல்,நுண்ணுயிரியல்,தாவரவியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை,இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விருப்பமுள்ள நபர்கள் 28.02.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்:05, பாலாஜி தெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம் – 601204, தொலைபேசி எண்: 044-27972457 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *