உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியாக இருந்தது அது தற்போதைய திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 24 நகர மன்ற உறுப்பினர்களைக் கொண்ட நகராட்சிக்கு போதிய அலுவலக வசதி இல்லாததால் தற்காலிகமாக இயங்கி வந்தது நகராட்சி அலுவலகம்இந்த நிலையில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் புதிய அலுவலக கட்டுவதற்கு ரூபாய் 3.5. கோடி நிதி ஒதுக்கீடு செய்தது அடிப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் புதிய நகராட்சி அலுவலக கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார் துணைத் தலைவர் வைத்தியநாதன் நன்றி கூறினார் இதில் ஒன்றியக் குழு பெருந்தலைவர் ராஜவேல்நகராட்சி ஆணையர் சரவணன் தாசில்தார் ராஜீ முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான ஜெய்சங்கர் நகர மன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ் ஜெயந்தி மதியழகன் செல்வகுமாரி ரமேஷ் பாபு குமரவேல் கலா சுந்தரமூர்த்தி மாலதி ராமலிங்கம் ராஜேஸ்வரி சரவணன் தமிழரசி கனகவல்லி வாசுக்கு மற்றும் நகராட்சி பொறியாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
பட விளக்கம்உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டுவதற்கு பூமி பூஜையை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்தார் உடன் எம் எல் ஏ மணிகண்டன் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் வைத்தியநாதன் மற்றும் ஆணையர் சரவணன் அதிகாரிகள் உடன் இருந்தனர்