கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கொடை விழா
![]()
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கொடை விழாவை ஒட்டி கடந்த 89 ஆண்டுகளாக நடந்து வந்த இந்து சமய வகுப்பு மாநாட்டிற்குஅறநிலையத்துறை தடை விதித்ததை கண்டித்து இந்து தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பத்து நாட்கள் திருவிழா மிக விமர்சையாக நடப்பது வழக்கம் இந்த திருவிழாவின் போது இந்து சமய வகுப்பு மாநாடு நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 89 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மாநாடு இந்த முறை நடத்தப்படக்கூடாது என அறநிலைய துறையினர் தடைவிதித்துள்ளதாககூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அதில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மாநாட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது…

