திருக்கோவில் மஹா சிவராத்திரி கொடைவிழா கால்நட்டு வைபவம் இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத சிவராத்திரி மகா சிவராத்திரி என அழைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூதத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மகாசிவராத்திரி அன்று குடிதெய்வங்கள் என்று அழைக்கப்படும் குல தெய்வக் கோவில்களில் கொடை விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.இக்கொடை விழாவிற்கு அவரவர் தங்களது குல தெய்வக் கோவில்களுக்கு வந்து வழிபாடு நடத்துவதை மரபாகவே கடைபிடித்து வருகின்றனர். இதனையொட்டி தென்காசி பெரியசாமி கோவில் தெருவில் வீற்றிருக்கும் அருள்தரும் அம்பிகை தேவி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் மஹா சிவராத்திரி கொடைவிழா கால்நட்டு வைபவம் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு கணமதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் கால்நட்டு வைபவம் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் முளைப்பாரி முளை விடுதலும் நடைபெற்றது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி 18.2.23 சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு பால்குட அழைப்பும் மதியம் 12 மணிக்கு சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும் நடைபெறும். மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடை பெறவுள்ளது. மாலை 6 மணிக்கு தீர்த்தக்குட அழைப்பும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும். இரவு 12 மணிக்கு மகா சிவராத்திரி சிறப்பு தீப ஆராதனை நடைபெறும். 19.2.23 ஞாயிற்றுக்கிழமையன்று காலை மகா சிவராத்திரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு பொங்கலிடுலும் மாலை 6.30 மணியளவில் சந்தனமாரி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்கார தீப ஆராதனையும் நடைபெறும். மாவிளக்கு எடுத்து முளைப்பாரி வீதி வலம் வருதலும் நடைபெறவுள்ளது. இரவு 12 மணிக்கு சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது. 20.2.23 திங்கள்கிழமை காலை 9.30. மஞ்சள் நீராட்டு வைபவமும் முளைப்பாரி சிற்றாறு கொண்டு செல்லும் நிகழ்வுடன் கொடை விழா நிறைவு பெறும் என விழாக்கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.