பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பு

Loading

பண்ருட்டி, பிப், 12 – கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட        மனப்பக்கம் கட்டியாம்பாளையம் ஊராட்சியில் நியாய விலை கடையை திறந்து வைத்து உரையாற்றினார். பின்னர் சேமக்கோட்டையில் ஆதிதிராவிடர் பள்ளி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். சிறுவத்தூர் அங்கு செட்டிபாளையம் ஊராட்சியில் நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். கொக்குப்பாளையத்தில் கரும காரிய மண்டபம், மற்றும் எல். என். புரம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் துவக்கி வைத்தார்.     மணம்தவிழ்ந்த புத்தூர் ஊராட்சியில் பொது சுகாதார மருத்துவமனை ஆய்வு        செய்தார்.   நத்தம் ஊராட்சியில் நெல் கொள்முதல் சென்டர்  சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் சுரேந்தர், மாவட்ட செயலாளர்  ஆனந்த், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஒன்றிய தலைவர் விஜயகாந்த், ஒன்றிய துணை தலைவர் விஜயகுமார், பொருளாளர் சிலம்பரசன், ஜெயப்பிரகாஷஅப்பர், தேவராஜ், கிளை கழக நிர்வாகிகள் ரவீந்தர், மணி, தாமரை செல்வம், ராஜமூர்த்தி, தலித் சக்திவேல், மற்றும் த.வா.க. மாவட்ட , நகர,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.     ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள். வார்டு உறுப்பினர்கள், மக்கள் நல பணியாளர். மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply