நடிக்க மறுத்த ரெடின் கிங்ஸ்லி… தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Loading

நடிக்க மறுத்த ரெடின் கிங்ஸ்லி…தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படம் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து ‘அண்ணாத்த’, ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், இவர் தற்போது ‘லெக்பீஸ்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி சில நாட்கள் நடித்து விட்டு மீதி காட்சிகளில் நடிக்க மறுத்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் படத்தின் தயாரிப்பாளர் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “லெக்பீஸ் படத்தில் 10 நாட்கள் நடிக்க சம்பளம் பேசி கிங்ஸ்லியை ஒப்பந்தம் செய்தோம். அவர் நான்கு நாட்கள் மட்டுமே நடித்தார். அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டார். மீதி நாட்கள் நடிக்க மறுத்து வருகிறார். எனவே அவருக்கு வழங்கிய சம்பளத்தையும் தயாரிப்பு செலவுக்கான நஷ்ட ஈடு தொகையையும் வாங்கி தரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
0Shares

Leave a Reply