பிப்.24-ம் தேதி வெளியாகும் அருண் விஜய்யின் ‘பார்டர்’

Loading

அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘ஈரம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் அறிவழகன். தொடர்ந்து, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ படங்களை இயக்கியவர், அருண் விஜயை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘பார்டர்’. ரெஜினா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.சென்னை, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படம் கடந்தாண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply