புதுச்சேரியில் சுகாதாரத்துறை மூலமாக குழந்தைகளுக்கு குடல் புழு நீக்கும் மருந்து கொடுக்கப்பட்டது.

Loading

தேசிய குடல் புழு நீக்க நாளான இந்திய அரசு வரும் காலங்களில் குடல்புழு இல்லாத குழந்தைகள் என்ற நோக்கத்தோடு தேசத்தில் உள்ள அனைத்து 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் குடல் புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள குடல் புழுக்களால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதனை தடுக்க இந்திய சுகாதார அமைச்சகம் , மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம், கல்வி அமைச்சகம்  மற்றும் மனித வளம் மற்றும் மேம்பாடு அமைச்சகம் இணைந்து ஆண்டுதோறும் இரண்டு முறை பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிகளில் அரசு பள்ளிகளிலும் அரசு சார்ந்த பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் மற்றும் தனியார் பள்ளிகளிலும்பாலிடெக்னிக்கல்லூரிகளிலும்,ஐடிஐநிறுவனங்களிலும்பயிலும்1வயதுமுதல்19வயதுவரைஉள்ளசுமார்3,15,000குழந்தைகள் மற்றும் இளம் வளர் பருவத்தினருக்கு  குடல் புழு நீக்க மாத்திரை வழங்க புதுச்சேரி அரசுதிட்டமிட்டுள்ளது.அத்திட்டத்தின்படி இன்று புதுச்சேரியில் உள்ள சொசைட்டி முற்போக்கு அரசு உதவி உயர்நிலைப்பள்ளியில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி ஸ்ரீராமலு அவர்கள் தேசிய குடல் புழு நீக்க நாள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து குடல் புழு நீக்கத்தின் முக்கியத்துவத்தையும் ரத்த சோகையை தடுப்பது பற்றியும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை எவ்வாறெல்லாம் மேம்படுத்துவது குறித்தும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் ( பொது சுகாதாரம்) டாக்டர் ஆர் முரளி, துணை இயக்குனர் (தடுப்பூசி பிரிவு) டாக்டர். B. ராஜாம்பாள், துணை இயக்குனர் (தகவல் கல்வி தொடர்பு பிரிவு) டாக்டர். ஜி ரகுநாதன் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவாக துணை இயக்குனர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்) மற்றும் குடல்புழு நீக்க நாள் திட்டத்தின் நோடல் அதிகாரியான  டாக்டர் வி. ஆனந்தலட்சுமி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சொசைட்டி முற்போக்கு அரசு உதவி உயர்நிலைப்
பள்ளியின் தாளாளர் A. வேதாந்தரன்,  தலைமை ஆசிரியர் A. ராஜேந்திரன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *