மின் தகனமேடை அமைக்க வேண்டும் பாமக கவுன்சிலர் இ.தினேஷ்குமார் கோரிக்கை :
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் மாவட் ட ஊராட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேசுவரி தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட ஊராட்சியின் அரசு செயலர் கென்னடி பூபாலராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார் பே சியதாவது :மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாமக கவுன்சிலர் இ.தினேஷ்குமார் பேசும் போது, வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் மின் தகனமேடை அமைக்க வேண்டுமென பாமக மாவட்ட கவுன்சிலர் இ.தினேஷ்குமார் கோரிக்கை வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில்,வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க மணவாளநகர், வெங்கத்தூர் கண்டிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தகனமேடை இல்லை.எனவே வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் மின் தகனமேடை அமைக்க வேண்டும் எனவும், இல்லையேல் திருவள்ளூர் எல்.ஐ.சி அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கி மின் தகனமேடை அமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் பூமி பூஜை நடத்தப்பட்டது.ஆனால் இதுநாள் வரையில் அப்பகுதியில் மின் தகனமேடை அமைக்க வில்லை.எனவே அந்த நிதியின் மூலமாவது வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் மின் தகன மேடை அமைத்து தர வேண்டுமென மாவட்ட கவுன்சிலர் இ.தினேஷ்குமார் கோரிக்கை விடுத்தார். மேலும் மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்தில் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை தெரிவிக்கின்றனர். அதே போல் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருடன் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மாதத்தில் 2 நாட்கள் (அதாவது 2-வது சனிக்கிழமை, 4-வது சனிக்கிழமைகளில் ) பொது மக்களின் குறைகளை கேட்டு அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுகக வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் சரசுவதி,சிவசங்கரி, டி.தென்னவன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டார்கள். இறுதியில் மாவட்ட ஊராட்சி அரசு செயலர் கென்னடி பூபாலராயன் நன்றி கூறினார்.