தென்காசி கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிராமம் அருள்மிகு சீதா லட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமி ஆலயத் திருக்கோவில் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷ்ண கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை கணபதி ஹோமம் மாலை 4.30க் யாகசாலை பிரதிஷ்டையும் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 6.30. மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடை பெறவுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 9.30.க்குள் சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் திருமதி. மீனா பட்டாச்சார்யா, செயல் அலுவலர் திருமதி கார்த்தி லட்சுமி, பரம்பரை அறங்காவலர் திரு. R. சுப்பிரமணியன், திரு. A.S.R.கிருஷ்ணன் (எ) ராமு, திரு.K .வரதராஜன் (எ) ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர். ஆன்மீகச் சொற்பொழிவுகளும், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.