ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
![]()
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பச்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ.30.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

