“தமிழை தேடி” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் :
தமிழன போராளியும்,பொங்கு தமிழ் அறக்கட்டளையின் நிறுவனருமான மருத்துவர் அய்யா அவர்கள் வருகிற 21 ம் தேதி சென்னை முதல் மதுரை வரை “தமிழை தேடி” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதையொட்டி அதற்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மணவாளநகரில் நடைபெற்றது.மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோ.ரவிராஜ், மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன்ஆகியோர் கலந்து கொண்டு இந்த “தமிழை தேடி” விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் சிறப்பான முறையில் அமைவதற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.அப்பொழுது ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோ.ரவிராஜ் பேசுகையில், பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இல்லை, அரசு நிர்வாகத்தின் பயன்பாட்டில் தமிழ் எங்கும் இல்லை,எதிலும் இல்லை,தமிழக அரசு அணைகள் தமிழில் இல்லை, இது போன்று பல ஆண்டுகளாக தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆட்சியிலும் தமிழ் உரிய முக்கியத்துவம் பெற வில்லை,தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்பதால் “தமிழை தேடி” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரைப் பயணத்தை 84 வயதிலும் ஒரு இளைஞனாக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொள்கிறார்.அதற்கான ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இங்கிருந்து ஒட்டு மொத்த திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் அணிவகுக்க உள்ளதால் அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் ஒன்றிய,நகர,மாவட்ட அளவிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்,மகளிர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.