300 குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பெரும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன் புதூரில் அரசின் எந்தவித முறையான அனுமதியும் இன்றி செயல் படும் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் உமி மற்றும் நெல் அவியலுக்கான அடுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளால் வெளியேறும் சாம்பல் கழிவுகள், காற்றில் கலந்து இப்பகுதியில் குடியிருக்கும் சுமார் 300 குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பெரும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் செயல்படும் அரிசி ஆலையால் இயந்திரங்கள் இயங்கும் போது வரும் இறைச்சல் சத்தம் காதை கிழிக்கும். இரவு நேரத்தில் வயது முதிர்ந்தவர்கள் , நோயாளிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பெரும் இடையூராக உள்ளது. மேலும் திறந்தவெளியில் மலைபோல் குவித்து வைக்கப்படும் உமி, தவிடு, காற்றடிக்கும் போது வேகமாக பறந்து, பேருந்து உட்பட அப்பகுதியில் செல்லும் வாகனங்களில் செல்வோரின் கண்களில் பட்டு, பார்வையை பறிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.அந்த சாலையில் பயணிப்போர், காற்றில் பறந்து வரும் உமி தவிடால் கண் பார்வையை பாதித்து நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.மேலும் ஆலையிலிருந்து நெற்பயிரின் உமி, தவிடு ஆகியவற்றை ஒப்பந்த முறையில் கொண்டு செல்லப்படுகிறது.உமி எரிபொருளாகவும், தவிடு கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.பல மாதங்களாக இங்கு சேகரமாகும் உமி, தவிடுகள் அகற்றப்படாததால் திறந்த வெளியில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்போது, உமி பறந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் புழுதி போல் முழுவதும் படர்கிறது. இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் இந்த நவீன அரிசி ஆலைகள் பல சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது. எனவே உடனடியாக இந்த அரிசி ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது வார்டு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்..