மணல் கடத்தலில் தகராறு தாக்கப்பட்ட திமுக நிர்வாகியின் மனைவி காவல் நிலையம் எதிரே தர்ணா
பேரணாம்பட்டு அடுத்த குண்டல பள்ளி ஊராட்சி பண்டல தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கே .சீனிவாசன் இவர் திமுக ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இவர் தற்போது ஊராட்சி கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்காக தனது ஊர் குடிப்பள்ளியில் இருந்து டிராக்டர்களில் மணல் எடுத்து வந்து பணியை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது குண்டலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அன்பு மகன் குட்டி என்பவர் நாங்கள் மணல் எடுத்தால் எங்கள் மீது புகார்கள் தருகிறாயே. இப்போது நீ மட்டும் மணல் கடத்துகிறாயே என தட்டி கேட்டுள்ளார். இருவருக்கும் வாய்சண்டை முற்றிய நிலையில் சீனிவாசன் மனைவி கோமளா இடையே புகுந்து தனது கணவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சீனிவாசன் குண்டலப்பள்ளி அருகே சென்றபோது குண்டல பள்ளியில் குட்டி மற்றும் கள்ளிச்சேரி சேர்ந்த கபில் என்பவரும் வழிமறித்து தாக்கியுள்ளனர் இது காயம் அடைந்த ரத்தம் வழிந்த நிலையில் சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி அவரது மனைவிக்கு தகவல் தந்துள்ளனர் சீனிவாசனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் தனது கணவரை தாக்கிய குட்டி மற்றும் கபில் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனிவாசன் மனைவி பேர்ணாம்பட்டு காவல் நிலையம் முன்பு மாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நிருபர்களிடம் பேசிய கோமளா தன் கணவரை தாக்கிய குட்டி மீது காவல் நிலையத்தில் இதற்கு முன் நான்குமுறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். சீனிவாசனும் தாக்கிய குட்டியும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்கட்சி விவகாரம் இப்போது மணல் கடத்தலில் வெளிப்பட்டுளது என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.