40% -க்கும் அதிகமான விற்பனையளவை எட்டி சாதனை புரிந்திருக்கும் ஹை – டெக் பைப்ஸ் லிமிடெட்
இந்தியாவில் ஸ்டீல் புராசஸிங் துறையில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஹை-டெக் பைப்ஸ் லிமிடெட், 2022 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டின், மூன்றாவது காலாண்டிற்கான மற்றும் 9 மாதங்கள் காலஅளவிற்கான அதன் நிதிசார் செயல்பாட்டு முடிவுகளை அறிவித்திருக்கிறது. Q3FY22 – ல் எட்டப்பட்ட ரூ.440.02 கோடியுடன் ஒப்பிடுகையில், Q3FY23 – ல் இயக்க செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் 29% அதிகரித்து, ரூ.569.29 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. Q3FY22-ல் 65,088 டன்களாக இருந்த மொத்த விற்பனை அளவானது, நிதியாண்டு 23-ல் இதே காலஅளவில் 40% உயர்ந்து 91,232 டன்கள் என்ற அளவில் பதிவாகியிருக்கிறது. வரிக்குப் பிந்தைய லாபம், Q3FY22 – ல் ரூ.10.17 கோடியாக இருந்ததோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 28% அதிகரித்து, ரூ.13.02 கோடி என வளர்ச்சி கண்டிருக்கிறது. அதேநேரத்தில், உத்திரபிரதேசத்தின் சிகந்திராபாத் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கோல்டு ரோலிங் மற்றும் தொடர்ச்சியான கால்வனைசிங் உற்பத்தி தொழிலகத்தோடு ஒரு முன்னோக்கிய ஒருங்கிணைப்பு செயல்பாடாக 50,000 MTPA என்ற நிறுவப்பட்ட திறனுடன் கலர் கோட்டிங் உற்பத்தி பிரிவில் வர்த்தக ரீதியிலான உற்பத்தியை இந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் உற்பத்தி அமைவிடங்களின் ஒட்டுமொத்த திறன் பயன்பாடு செயல்பாடும் வளர்ச்சியினைக் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழும உள்ளமை பயனாளியாக சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் RJ சோலார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஐந்து Mwp மின்சாரத்தை கொள்முதல் செய்வதை இந்நிறுவனம் சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. உத்திரபிரசேத்தின் சிகந்திராபாத்தில் நிறுவப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தி தொழிலகத்தின் அதிகபட்ச மின்சக்தி தேவைகள் இப்போது சூரியஒளி மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.