பட்டறிவு சிறப்பு பயிற்சி முகாம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மண்டல அளவிலான பட்டறிவு சிறப்பு பயிற்சி முகாம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.இம்முகாமிற்க்கு செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியில் தர்மபுரி மண்டலத்திலுள்ள 16 பேரூராட்சிகளின் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு, திடக்கழிவு மேலாண்மை செய்முறைகளை குறித்து கையாளப்படும் களப்பணி பட்டறிவு பயிற்சியும், வளம்மீட்பு பூங்காவில் செயல் முறை பயிற்ச்சியும், படவிளக்க பயிற்ச்சியும் பாலக்கோடு நகரில் உள்ள வார்டு பகுதிகளில் இரண்டாம் நிலை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வீடுகள்தோறும் குப்பை பிரித்து வாங்கப்படுவது, மற்றும் வணிக நிறுவனங்களின் குப்பை தரம் பிரித்து வாங்கப்படுவது, வாகனங்களில் பாதுகாப்புடன் குப்பைகளை மூடி எடுத்து செல்வது, வள மீட்பு பூங்காவில் குப்பைகளை மறுசுழற்சி செய்யப்படுவது, இயற்கை உரம் தயாரிப்பிற்கான மூலப் பொருட்களான ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம் தயாரிக்கப்படுவது குறித்த செயல் விளக்கம் மற்றும் வழிமுறை கையேடுகள் வழங்கப்பட்டு பட்டறிவு பயிற்சி வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பட்டறிவு பயிற்சிஅளித்தனர்.இதில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.