ஶ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு தினம்.
சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஶ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 24ஆம் ஆண்டு விளையாட்டு தினம் கல்லூரி வளாகத்தில் நடைவெற்றது.விளையாட்டு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னால் சர்வதேச டி.டி.வீரர் மற்றும் பயிற்ச்சியாளருமான பி.புவனேஸ்வரி வருகைதந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இதனையடுத்து விளையாட்டு போட்டியில் பங்குகொண்ட அக்னி,அனன்தா,அம்ருதா,அன்தரிக் ஷா,அனிலா ஆகிய குழுவினர்கள் கல்லூரி மைதானத்தில் அணிவகுப்பு நடத்தினர்.அணிவகுப்பைதொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்குகொண்ட முன்னால் விளையாட்டு வீராங்கனை புவனேஸ்வரி தீப்பந்தம் ஏற்றி வைத்து நிகழ்ச்சி தொடங்கியது.
இந்நிகழ்வில் விளையாட்டு போட்டியில் வெற்றிவாகை சூடிய அனிலா குழுவினர் கோப்பையை வென்று தட்டிசென்றது.விளையாட்டு போட்டியில் பங்குகொண்ட அக்னி,அனன்தா,அம்ருதா,அன்தரிக் ஷா குழுவினர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் போட்டியாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.இதனையடுத்து பயிற்ச்சியாளர் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள்,கல்லூரி பணியாளர்களை மேடையில் பாராட்டி கெளரவிக்கபட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.மோகன ஶ்ரீ,துணை முதல்வர் பி.பி.வனிதா,உடற்கல்வி இயக்குனர் அனிதா,தர்மக்கத்தா மற்றும் தலைவர் கொல்லா வெங்கட சந்திரசேகர்,தேவஸ்தான பொறுப்பாளர் உறுப்பினர் வூரா ஆஞ்சநேயுலு,கரஸ்பாண்டட்வூட்டுகு ரு சரத்மார்,நிதிக்கு பொறுப்பான உறுப்பினர் தேசு லட்சுமி நாராயணா,சி.ஏ.நலம் ஶ்ரீ காந்த்,விடுதிகளின் பொறுப்பாளர் உறுப்பினர் ஜி.விஜயகுமார்,பள்ளிகளின் பொறுப்பாளர் கரஸ்பாண்டட்,செயலாளர் ஏ.பிரசாத் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.இதில் மாணவிகளின் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக யோகா,சிலம்பம்,அரேபிக்ஸ் போன்ற திறமைகளை மேடையில் நிகழ்த்திகாட்டினர்.இதில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.