விழுப்புரம் ஆட்சியர் மோகன் இடமாற்றம். மனம் உருகி வாழ்த்திய பழங்குடி இருளர்கள்..

Loading

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் செய்தி  மக்கள் தொடர்பு துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரியா விடை பெற்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் தான் மிகவும் சுவாரஸ்யமானது. பழங்குடி இருளர்கள் வாழ்வில் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வரும் அவர்கள் கல்வியை தொடர சாதி சான்று மிக முக்கியமான ஒன்றாகும். மாவட்ட ஆட்சியராக மோகன் பொறுப்பேற்ற பிறகு ஜாதி சான்று விண்ணப்பித்த 150க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் சாதி சான்று வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். அது மட்டும் அல்லாமல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வந்த பழங்குடி இருளர்களின் நிலையை மழை காலங்களில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று அறிந்து உடனடியாக பலருக்கு இலவச மனைப் பட்டாக்களை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு இலவச வீடு கட்டும் ஆணையையும் பிறப்பித்தார். அது மட்டும் இல்லாமல் அந்த மக்களிடம் தன்னுடைய கைபேசி எண்ணையும் வழங்கி எந்த நேரத்திலும் அழைக்கலாம் என்றும் கூறி வந்தார். இது அந்த மக்களிடையே ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுபோல எண்ணற்ற பணிகளை பல தரப்பு மக்களுக்கும் செய்து வந்தவர் ஆட்சியர் மோகன்.இந்த நிலையில் அவர் வேறு துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்று அறிந்த பழங்குடி இருளர்கள் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி புத்தகங்கள் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்வில் பேராசிரியர் கல்விமணி, அருட்தந்தை ரபேல் சகோதரி லூசினா மற்றும் பழங்குடி இருளர்கள் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆட்சியரின் இடமாற்றம் தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் அதே நேரத்தில் அவர் செல்லுகின்ற இடத்தில் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கையும் தங்களுக்கு இருப்பதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். இன்னும் கொஞ்ச நாள் ஆட்சியை பொறுப்பில் நீடித்திருந்தால் தங்களுக்கான பல தேவைகளையும் பூர்த்தி செய்து இருப்பார் என்றும் நெகழ்ச்சியோடு தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனையோ ஆட்சியர்கள் பணியாற்றினாலும் கூட ஆட்சியர் மோகன் எளிதில் மக்கள் அனுகக்கூடிய ஒருவராக இருந்தார். அதிகாலையில் நடை பயிற்சியின் போதே மக்கள் குறைகளை கேட்டு அறிவதும் உடனே அதிகாரிகளை அழைத்து அவற்றை சரி செய்ய ஆணையிடுவது என தினந்தோறும் அவர் நடவடிக்கைகள் அமைந்திருந்தது.ஆட்சியாளராக பணியாற்றுகின்ற போது எளிமையாகவே இருந்தவர் ஆட்சியர் மோகன் எந்த நேரத்திலும் ஏதாவது பிரச்சனைகள் என்ற கேள்விப்பட்டால் உடனடியாக விரைந்து சென்று அந்த இடத்தில் இருந்து அவற்றை சரி செய்வதில் மற்ற அதிகாரிகளை விட முதன்மையானவராக திகழ்ந்தார் ஆட்சியர் மோகன். மக்கள் பிரச்சினைகளை அறிந்து அதிகாரிகளையும் சில நேரத்தில் கடிந்து கொள்வதும் உண்டு. ஆட்சியர் இடமாற்றம் பெரும்பாலானவர்களுக்கு  வருத்தத்தையே அளிக்கிறது மீண்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு அவர் ஏதாவது ஒரு முக்கிய பொறுப்பிற்கு வரவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஒரு ஆட்சியரின் இடமாற்றம் பலதரப்பு மக்களையும் வருந்த செய்வது என்பது இதுவே முதன் முறையாக இருக்கும். தொடரட்டும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் அவர் பணி.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *