காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் எதிர்ப்பு தினம்
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் எதிர்ப்பு தினம் மற்றும் இரண்டு வார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொழுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் அரசு அலுவலர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை தாங்கியபடி கோஷங்களை எழுப்பி சென்றனர்