இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி திமுக கூட்டணி காங்கிரஸ்க்கு ஆதரவு!

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின்  மாநில தலைவர் நெல்லை.முபாரக் அறிவித்துள்ளார்எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் EVKS.இளங்கோவன் ஈரோடு தெற்கு மாவட்ட SDPI கட்சியின் அலுவலகத்திற்கு  நேராக வருகை புரிந்தவர் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு SDPI கட்சி தனது முழு ஆதரவினை அளிப்பதாகவும், இந்த தேர்தலில்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  வெற்றிபெற்று ஈரோடு கிழக்குத் தொகுதியின் வளர்ச்சிக்கும், தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கும், தமிழகம் மற்றும் சிறுபான்மை சமூக மக்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் பாடுபட வேண்டும் என நெல்லை.முபாரக் கோரிக்கை வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் ராஜா உசேன், SDTU தொழிற்சங்க மாநில பொருளாளர் ஜே.எம்.ஹசன் பாபு, காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி பொறுப்பாளர் முத்துபேட்டை ஷேக் பரீத், எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், வடக்கு மாவட்ட தலைவர் A.M.முஹசின் காமினூன், பொதுச்செயலாளர் சமீருல்லா, சேலம் மாவட்ட தலைவர் அப்சர் அலி, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான EP.ரவி, மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், திமுக மாநில தலைமை கழக பேச்சாளர் ஈரோடு.இறைவன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜம்பை.ரபீக், மாவட்ட செயலாளர்கள் க.முனாப், அ.சாகுல் ஹமீது, பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், பொருளாளர் ஹபீபுல்லா ஷெரிஃப், ஈரோடு தெற்கு மாவட்ட SDTU தொழிற்சங்கத்தின் தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், செயலாளர் தஸ்தகீர், துணை தலைவர் முகமது அலி, வடக்கு மாவட்ட செயலாளர் தாவூத் அலி, மருத்துவர் அணியின் மாவட்ட செயலாளர் முசாதிக் அலி, நிமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சபீனா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள்.சபீர், துணைத்தலைவர் சுலைமான் சேட், பொருளாளர் ஃபக்ருதீன், செயற்குழு உறுப்பினர் முகமது ஃபர்மானுல்லா, ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் மஸ்தான், துணைத் தலைவர் அப்துல் சலாம், துணைச்செயலாளர்கள் ஜெமீஸ், ஷார்ப் ஷாஜகான், பொருளாளர் ஷேக் பாஷா, கோபி தொகுதி தலைவர் தஸ்தகி ராஜா உள்ளிட்ட மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply