பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

Loading

பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியின் சார்பாக ராயபுரம் கிழக்கு மண்டலிள் சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரபியா சோமசுந்தரம் ஏற்பாட்டில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை நடத்தினர்.
முகாமில் எம்.எம்.என் கண் மருத்துவமனை குழு கண் மருத்துவ பரிசோதனை முகாம்,கே.ஆர்.கே ஃப்பேமலி டென்டிஸ்டிரி பல் மருத்துவம் டாக்டர் எம்.டி.எஸ் ரமேஸ்குமார்,வித்யுட் அக்கு பஞ்சர் மற்றும் ஆல்ரநேடிவ் தெரெபி மருத்துவர் எம்.டி.(அக்கு)பிஎச்.டி.(அக்கு)டாக்டர் பாரதி,ஆயுர்வேதம் சித்த மருத்துவம் சஞ்சீவனம் கிளினிக் எம்.டி. (அக்கு) பி.இ.எம்.எஸ் டாக்டர் இன்ஃப்ன்ட் பேட்ரிக் மற்றும் பாலாஜி போன்ற சிறந்த மருத்துவர்களால் மருத்துவம் பார்க்கபட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கபட்டது.இம்முகாமில் கண் குறைபாடுகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை கண் புரை அறுவை சிகிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டு சாமானிய விலையில் மூக்கு கண்ணாடிகள் வழங்கபட்டது.இம்முகாமில் கவிதா,நளினி,நளினி,சாந்தி,சாந்தி,கங்கா,வனஜா,மகாலட்சுமி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மண்டல் நிர்வாகிகள்,வட்ட நிர்வாகிகள்,மருத்துவ குழுவினர் பலர் கலந்துகொண்டு முகாமை சிறப்பித்தனர்.இம்மருத்துவ முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகைதந்து பயண்பெற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *