முதல் பத்து இடங்களை பெற்ற காவல் துறையினரின் குழந்தைகளுக்கு பரிசு தொகை
மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக 2020-2021 ம் கல்வியாண்டில் +2 வகுப்பு பொது தேர்வில் முதல் பத்து இடங்களை பெற்ற காவல் துறையினரின் குழந்தைகளுக்கு பரிசு தொகையாக முதல் இடம் பிடித்த குழந்தைக்கு 7,500 ரூபாயும், இரண்டாம் பரிசு தொகை 5,500 ரூபாயும், மூன்றாம் பரிசு தொகை 3,500 ரூபாய் மற்றும் மீதமுள்ள மாணவர்களுக்கு தலா 2,500 ரூபாய் பரிசு தொகையை மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் IPS அவர்கள் வழங்கி வாழ்கையில் மென்மேலும் உயர்ந்து தங்களின் பெற்றோர்களை பெருமைப்பட செய்ய வேண்டும் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.