மதுரை கோரிப்பாளையம் பகுதியை அழகர்பாளையமாக மாற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை

Loading

மதுரையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் தலைமையில் அண்ணாநகர் அருகில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு முன்னிலை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார், கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மறுபடியும் தேர்வு செய்யப்பட்ட ஜேபி நட்டா அவர்களை செயற்குழு பாராட்டிகிறது, பிரதமர் மோடி அவர்களை ஜி டொன்ட்டி மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்த உலக தலைவருக்கு செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது, எனது பூத் வலிமையான பூத் என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு பூத்திலும் 25 உறுப்பினர்களை சேர்த்து கமிட்டி அமைத்துக் கொடுத்த மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு, மாவட்ட செயற்குழு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது, மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்றி தூய்மை பணி மேற்கொண்ட தாமரை சேவர்கள் குழுவை செயற்குழு பாராட்டுகிறது, மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரை சூட்ட வேண்டும், மதுரையில் அன்னியர் படையெடுப்பால் உருவாக்கப்பட்ட கோரிபாளையத்தை அழகர்பாளையமாக மாற்றிட, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கரசாலை அமைத்துக் கொடுத்த வாஜ்பாய் அவர்களுக்கு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் வெண்கல சிலை அமைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதமர் நரேந்திர மோடியின் உன்னத திட்டமான ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் கல்வெட்டையும் வைக்காத மாவட்ட மாநகராட்சி நிர்வாகத்தை செயற்குழு கண்டித்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய துணைமேயர் நாகராஜனை மாவட்ட செயற்குழு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, மதுரை மாநகராட்சி 86வது வார்டுக்கு தேவையான நிதி ஒதுக்காததை கண்டித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை செயற்குழு வலியுறுத்துகிறது மேலும் மதுரை மாவட்டத்தில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டுகளை செயற்குழு தெரிவிக்கின்றது, ஏழை எளிய மக்களை சிரமபடுத்துகின்ற மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வை தி மு க அரசு ரத்து செய்ய வேண்டும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என்ற பெயர் சூட்ட வேண்டும், மதுரை பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பாரதிய ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணை தலைவர்கள் கீரைத்துறை குமார், சத்யம் செந்தில்குமார், பழனிவேல், மீனா இசக்கிமுத்து, பொதுச் செயலாளர்கள் துரை பாலமுருகன் , வினோத்குமார், ஜோதி மணிவண்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலாளர்கள் சுப்பா நாகுலு, செண்பக பாண்டியன், ஹேமா, மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் முரளி பாஸ்கரன், ஓ பி சி அணி மாவட்ட தலைவர் சரவணக்குமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர் ஜனாஸ்ரீ முருகன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் அலெக்ஸ் பாண்டியன், சிந்தனையாளர் பிரிவு ஆழ்வார் ராஜா, சிறுபான்மை அணி மாநில செயலாளர் சாம் சரவணன்,  மாவட்ட இளைஞரணி  ஒருங்கிணைப்பாளர் நவீன் அரசு, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சதீஸ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, மீனாம்பிகை, ஒரேநாடு நிர்வாகி  வடமலையான் உள்பட ஏராளமான மாநில மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply