கோவில்பட்டியில் இந்திய செய்தித்தாள் தின விழா
கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் கோவில்பட்டி கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் வைத்து இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது.இந்தியாவில் ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் எனும் வார இதழ் ஜனவரி 29ம் தேதி 1780ம் ஆண்டு ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கிஸ் என்பவரால் கொல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் வர்த்தக செய்திகள் இடம்பெற்றன. இந்த இதழில் போர்செய்திகள் இடம் பெற்றதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.நாடு முழுவதும் முதல் வார இதழ் வெளியான ஜனவரி 29ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு செய்தித்தாள்கள் வழங்கப்பட்டு வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட அமைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார்.கொண்டயராஜு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி முன்னிலை வகித்தார்.பயிற்சி பள்ளி மாணவி மதுலக்க்ஷனா அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி மாவட்ட தலைவர் முத்துச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தினசரி செய்தித்தாள்களை வழங்கி பேசினார்.ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செய்திதாள்களை வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டனர். முடிவில் பயிற்சி பள்ளி மாணவி அன்னை பேச்சி நன்றி கூறினார். இந்திய செய்தித்தாள் தின விழாகோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் கோவில்பட்டி கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் வைத்து இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் எனும் வார இதழ் ஜனவரி 29ம் தேதி 1780ம் ஆண்டு ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கிஸ் என்பவரால் கொல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் வர்த்தக செய்திகள் இடம்பெற்றன. இந்த இதழில் போர்செய்திகள் இடம் பெற்றதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.நாடு முழுவதும் முதல் வார இதழ் வெளியான ஜனவரி 29ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கோவில்பட்டியில் நடந்தநிகழ்ச்சியில்ஓவியபயிற்சிபள்ளிமாணவர்களுக்கசெய்தித்தாள்கள்வழங்கப்பட்டுவாசிப்புபழக்கத்தைமேற்கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட அமைப்பாளர் முத்து முருகன் தலைமை வகித்தார்.கொண்டயராஜு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி முன்னிலை வகித்தார்.பயிற்சி பள்ளி மாணவி மதுலக்க்ஷனா அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட தலைவர் முத்துச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தினசரி செய்தித்தாள்களை வழங்கி பேசினார்.ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு செய்திதாள்களை வாசிப்பு பழக்கத்தை மேற்கொண்டனர். முடிவில் பயிற்சி பள்ளி மாணவி அன்னை பேச்சி நன்றி கூறினார்.