பண்டாரி கடற்கரை விடுதியில் சிறப்பு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
கைன்டு கருணை மனிதவள மேம்பாட்டு தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்டாரி கடற்கரை விடுதியில் சிறப்பு கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.கைன்டு நிறுவனர் ஏ.ஆர்.சாந்திலால் நஹார் தலைமையில் தலைவர் விமல்சந்த் தாரிவால் முன்னிலையில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜஸ்வந்த் ராஜ் பண்டாரி,சுபாஷ்சந்த் ரங்க்கா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.முன்னதாக முதன்மை விருந்தினராக 1234 அறக்கட்டளை நிருவனர் பி.ஜி.ராஜன் சிற்றின்பம்,பேரின்பம் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினார் இதனை தொடர்ந்து மனோகர் போக்கடியா லாஃப்பின் தெரபி நகைச்சுவை கலந்த பயிற்ச்சியின் மூலம் மன அழுத்தம்,உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் சிறப்பு பயிற்ச்சிகள் பங்குகொண்ட அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு வழங்கபட்டது.கருத்தரங்கத்தில் மனோகர் போக்காரியா,டாக்டர் சுனிதா ஜெயின் ஆகியோரை ராஜேந்திரன் சோர்டியா உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்தார்.இக்கூட்டத்தில் பங்குகொண்ட அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு ஜஸ்வந்ராஜ் பண்டாரி சார்பாக அறுசுவை உணவு வழங்கபட்டது.மேலும் நிகழ்ச்சி நடத்த விடுதியை இலவசமாக வழங்கியதோடு கைன்டு அமைப்பிற்க்கு 31,000 நண்கொடையாக வழங்கியும்,புரவலர் சுபாஷ்சந்த் ரங்க்கா 51,000வழங்கியது குறிப்பிடதக்கது.இந்நிகழ்வில் கைன்டு உறுப்பினர் ரமேஷ் பாபு குடும்பத்தினர் மற்றும் கைன்டு உறுப்பினர்கள்,நண்பர்கள், குடும்பத்தினருடன் பலர் வருகைதந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.நிகழ்வின் தொடக்கத்தில் பாடகர் இக்பால் திரைப்பட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து தொகுத்து வழங்கிய கைன்டு அமைப்பின் செயலாளர் கீதா நன்றியுரையாற்றி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.