கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய வாக்காளர் தின கருத்தரங்கம்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் துளிர்திறனறிதல் தேர்வு விழிப்புணர்வு மற்றும் தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் இரா.பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ப.சிவசங்கரன் முன்னிலை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா தேசிய வாக்காளர் தினம் வரலாறு குறித்து பேசியதாவது இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன25ல் தொடங்கப்பட்டதுஅதனை நினைவுகூறும் விதமாக இந்த தினம் முதன்முதலில் 2011 இல் இளம் வாக்காளர்களை தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது. இது வாக்குரிமை மற்றும் இந்திய ஜனநாயகத்தை கொண்டாடும் நாள் என்பதில் சந்தேகமில்லை. வாக்காளர்களின் சேர்க்கையை, குறிப்பாக தகுதியானவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.முன்னதாக வாக்காளரின் தகுதி வயது 21 ஆக இருந்தது, ஆனால் 1988 இல் அது 18 ஆக 61வது சட்டம் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா இந்தியாவில் வாக்காளரின் தகுதி வயதைக் குறைத்தது என்றும்,13வது தேசிய வாக்காளர் தினத்திற்கான கருப்பொருள், ‘வாக்களிப்பதைப் போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்’ என்பது வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்களின் வாக்குகளின் மூலம் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான தனிநபர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் தெரிவிக்கிறது என்றும், 18 வயது நிரம்பிய அனைத்து குடிமக்களும் தேர்தலில் வாக்களிக்க மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும்,
,மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் நடத்தப்படுகின்ற துளிர் திறனறிதல் தேர்வில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தேர்வு எழுதுவதன் மூலம் எதிர்கால போட்டி தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எவ்வித சிரமமின்றி எழுதக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்படுத்தி தருகிறது என்றும், துளிர் தேர்வு எழுதுவதன் மூலம் மாணவர்களுக்கு மாதந்தோறும் விஞ்ஞான துளிர் மாத இதழ் வழங்கப்படும் எனவும் இதுபோன்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
நிறைவாக ஒவிய ஆசிரியர் முனைவர் ம.பூபதி நன்றி கூறினார்.