திருவண்ணாமலை வாக்காளார் தின உறுதி மொழி ஏற்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 13- வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் இன்று அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் வாக்காளர்கள் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் 18 வயது நிறைவு பெற்ற பின்னர் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் ஜனநாயக கடைமையை ஒவ்வொரு வாக்காளர்களும் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தும், மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டதையும் நரில் சென்று பார்வையிட்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குமரன் (தேர்தல்), வீ.வெற்றிவேல், (பொது), கனிமொழி (நிலம்), திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.