இயக்குனர் மாதிரி நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் மாதிரி நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், ‘ரன் பேபி ரன்’. இதை மலையாள டைரக்டர் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தது மட்டுமின்றி, அவரைப்போலவே மேடையில் நடித்துக் காட்டினார். பிறகு அவர் கூறுகையில், ‘பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து என்னைத் தொடர்புகொண்டு. ‘ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டர் இருக்கிறது. அதை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் நடிப்பீர்களா என்று தெரியவில்லை’ என்று தயங்கினார்கள்.
‘அப்படி என்றால், உடனே நான் கதை கேட்கிறேன்’ என்று சொன்னேன். பிறகு என் வீட்டுக்கு இயக்குனர் கிருஷ்ணகுமார் வந்து கதை சொன்னார். கதையையும், என் கேரக்டரையும் விட, கிருஷ்ணகுமாரின் மலையாளம் கலந்த தமிழ் எனக்குப் பிடித்தது. அப்போது என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘மோளே… நீ நடிக்கணும்’ என்று அவர் என்மீது வைத்த நம்பிக்கையை உணர்ந்தேன். அவருக்காக நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். ஒரு நல்ல மனிதரைச் சந்தித்துப் பேசிய திருப்தி கிடைத்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் பணியாற்றிய பாணி எனக்கு மிகவும் பிடித்தது. மேலும், வசனங்கள் ெராம்ப ஸ்ட்ராங்காக இருந்தது. ஆர்ஜே பாலாஜியுடன் இது எனக்கு முதல் படம். அவர் எனக்கு நிறைய அறிவுரைகள் சொன்னார்’ என்றார்.