G.நேரு(எ) குப்புசாமி MLA முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து தகுதி குறித்து சமூகநல அமைப்புகளின் நிர்வாகிகளான நாங்கள் தங்கள் நோக்கமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற எண்ணத்தை வரவேற்று தங்களுக்கு உதவும் விதமாக மக்களிடம் எடுத்து சென்று போராடவும் உங்களோடு கைக்கோர்க்கவும் தயாராக இருக்கிறோம். தாங்கள் இது சம்மந்தமாக பல மேடைகளில் மாநில அந்ததுஸ்க்கான காரணத்தை எடுத்துக் கூறி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறீர்கள். அதே போல கடந்த 19.01.2023 அன்று புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த வழக்கறிஞர்களுக்கு அறைகள் கட்டி கொடுக்கும் அடிகல் நாட்டு விழாவில் மத்திய சட்ட அமைச்சரிடம் மனு அளித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தங்கள் கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி மாநில பிஜேபி தலைவர் மாநில அந்தஸ்து பற்றி கருத்து கூறி பேசியிருப்பது மக்களை குழப்பும் விதமாக இருந்தது. ஆகையால் தாங்கள் இதை சரிசெய்யும் விதமாக தங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசும் போது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.அதேபோல அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அனைத்து பொதுநல அமைப்புகளையும் கூட்டத்தை கூட்டி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கையை வலுப்பெற செய்ய வழிவகை செய்ய வேண்டும்.அதேபோல சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து சட்டமனற் உறுப்பினர்களையும் கொண்டு தீர்மானம் நிறைவேற்றி சட்டமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதை ஏற்கனவே நாங்கள் தங்களை சந்தித்து கோரிக்கையாக வைத்துள்ளோம்.
ஆனால் தாங்கள் எங்களது மேற்கண்ட கோரிக்கைகளை காலதாமதப்படுத்துவதால் பல அரசியல் கட்சி தலைவர்கள் எங்களையும் சேர்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆகையால் எங்களது மேற்கண்ட கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்ற ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.