மத்திய ,மாநில அரசை கண்டித்து , தமிழ்நாடு தழுவிய மறியல் போராட்டம் நடை பெற்றது.
![]()
கன்னியாகுமரி மாவட்டம்:- நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ஏ ஐ டி யு சி மாவட்ட குழு சார்பில் மத்திய ,மாநில அரசை கண்டித்து , தமிழ்நாடு தழுவிய மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் (பணியாளர்களுக்கு ரூபாய் 21,000திற்கு குறையாமல் ஊதிய வழங்க வேண்டும் என்வும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரூபாய் 6000க்கு குறையாமல் ஓய்வூதியம் பண பயன்களை உடனடியாக வழங்கிடவும், நல வாரிய பணப் பயன்களை உயர்த்தி வழங்கவும், ஒன்றிய அரசே தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும், நான்கு சட்டத்தொகுப்புகளை உடனடியாக கைவிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மறியல் போராட்டம் ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் தோழர் .எஸ் அனில்குமார் .தலைமையில் நடைபெற்றது .ஏ ஐ டி யு சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி .சின்னத்தம்பி துவக்க உரையாற்றி மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா .சுபாஷ் சந்திர போஸ், ஏ ஐ டி யு சி மாவட்ட செயலாளர் ஜி.சுரேஷ் மேசிய தாஸ், ஏ ஐ டி யூ சி மாவட்ட குழு .ஆர். இசக்கிமுத்து. ஏ ஐ டி யூ சி மாவட்ட குழு உறுப்பினர்கள் .ஆர் .செல்வராணி, ஏ. ஆனந்தவல்லி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்கி பேசினார்கள் .பிறகு 33 ஆண்கள் ,17, பெண்கள் உள்ளிட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்..

