சிறுதானிய உணவு திருவிழா-2023″ விழிப்புணர்வு நடைப்பேரணியை துவக்கி வைத்தார் :

Loading

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக வருகிற ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவேற்காடு பேருந்து நிலையத்தில் சிறுதானிய உணவு திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் “சிறுதானிய உணவு திருவிழா-2023” என்ற இலட்சினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைப்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் பழமையயும், பெருமையையும், ஆரோக்கியத்தையும் வழங்குகின்ற சிறு தானிய உணவு திருவிழா குறித்து விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களில் நடத்தி, அதனை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் இச்சிறுதானிய உணவு திருவிழா நமது திருவள்;ளுர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சிவன் கோயில் மைதானத்தில் வருகின்ற 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இச்சிறுதானிய உணவு திருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு பல்வேறு வகையான சிறுதானிய உணவுகள் தயாரிப்பது குறித்தும், அந்த உணவினால் நம் உடலில் ஏற்படக்கூடிய நம் உடல் ஆரோக்கியம் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு, நல்ல ஆரோக்கியமான சிறுதானிய உணவுகள் தயாரித்து வழங்கப்படவுள்ளது. ஆதலால் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திகொள்ள இந்த உணவு திருவிழா ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.
இந்த திருவிழாவில் பலவிதமான நிகழ்ச்சிகள், உணவுகளை எப்படி வேகமாக சமைப்பது, அதேபோன்று, உங்களுக்கே தெரியாத உணவு வகைகளின் நிகழ்வுகளில் தயார் செய்வதை நேடியாக பார்த்து, அதை நாமே நம் வீட்டில் தயார் செய்யலாம். அதே போன்று சிறு தானிய உணவு வகைகளை பலவிதமான பழைமை பெருமை வாய்ந்த சிறு தானிய உணவுகளை தயார் செய்து காட்டுவதற்கும், அன்றைய தினம் உணவு தயாரிப்பு நிகழ்ச்சியில் வழங்கயிருக்கின்றார்கள். ஆகவே, அந்த சிறுதானிய உணவு திருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.உணவே உயர்வு என்ற இலட்சிய நோக்கில் நடைபெறும் இச்சிறுதானிய விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சிறுதானியங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள், ஓவிய போட்டிகள் மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாதனை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆதலால், பொதுமக்கள் அனைவரும் இச்சிறுதானிய உணவு திருவிழாவிற்கு வருகை தந்து பயன்பெறுமாறு பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, சிறுதானிய உணவு திருவிழா நடைபெறும் சிவன் கோயில் மைதானப்பகுதியில் நடைபெற்று வரும் விழாப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றம் அறிவுரைகளை வழங்கினார்.இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் மலர்விழி, திருவேற்காடு நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply