அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரின் தம்பி மறைவு.
![]()
அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரின் தம்பி மறைவு. பொதுச்செயலாளர் ராஜா கண்ணீர் அஞ்சலி.
குடியாத்தம்.ஜன.அ.இ.கம்யூனிஸ்ட் டு கட்சி பொதுச் செயலாளர் டி. ராஜாவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி .இவரது பெற்றோர்கள் மறைந்த துரைசாமி நாயகம்மாள் இவர்களின் மூத்த மகன் தோழர் டி. ராஜா. இவரது தம்பி டி .கண்ணதாசன் (62).கடந்த 21ஆம் தேதி (சனி) உடல் நலமின்றி பள்ளி கொண்டவிலுள்ள தனது வீட்டில் காலமானார். இவர் ஒலக்காசி ஊராட்சியின் தலைவராகவும் , பள்ளிகொண்டா ரோட்டரி சங்க தலைவர், பள்ளிகொண்டா நகர வங்கியின் இயக்குனராகவும் இருந்தார். கண்ணதாசன் மறைவு செய்தி அறிந்து டெல்லியிலிருந்து தோழர் ராசா பள்ளிகொண்டா வந்து மறைந்த தம்பியின் உடலுக்கு மரியாதை கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் .இறுதி ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், ஏ ஐ டி யூ சி தொழிற்சங்க மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாநில மருத்துவ அணி ஜி .ஆர்.ரவீந்திரநாத், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ,வேலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா, மாவட்ட துணைச் செயலாளர் துரை செல்வம் , நகர செயலாளர் ஆனந்தன்,சிபிஎம் கட்சி தோழர்கள் சாமிநாதன், குணசேகரன் மற்றும் மாற்று கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

