சுமார்22.கோடியில் நவீன வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பலைய காந்தி மார்க்கெட் வளாகத்தில் டாக்டர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 21 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.விசாகன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் நகராட்சி (பொ) ஆணையர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி நகர் மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகரமைப்பு மண்டல பொறியாளர் மனோகரன் கோட்டாச்சியர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் பேசியதாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 13 ஆம் தேதி மேதகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கின்ற தீர்மானத்தின் மீது பேசுகின்ற சமயத்திலே சொன்னார் தமிழகத்திலே கிராமப்புறங்களில் இருக்கின்ற சாலைகளை மேம்படுத்துவதற்காக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பரிந்துரையின் பேரில் 4000 கோடி ரூபாய் 10 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் மேம்பாடு செய்வதற்கு நிதி ஒதுக்கி தந்துள்ளார். இனி வரும் காலங்களிலே தமிழகத்தில் அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி தொடங்கப்படும் ஒட்டன்சத்திரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 20 கோடியில் மருத்துவமனை அமையவிருக்கிறது தலைமை மருத்துவமனைக்கு 9 மாடிகள் கொண்ட சுமார் 70 கோடியில் அனைத்து வசதிகளுடைய மருத்துவமனை பழனியில் அமைக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு அதேபோல் தமிழ்நாட்டில் 26 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டியிலும் அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஒரு வாரத்துக்கு முன்பாக அனுமதி வழங்யுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் நான் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன் எந்த திட்டங்கள் வந்தாலும்ஒட்டன்சத்திரத்திற்கு என்று இடம் இருக்கும் விரைவிலே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் தொடங்கும் எனவும் காந்தி மார்க்கெட் இருந்த இடத்தில் தற்போது புதிய வணிக வளாகத்தில் காய்கனிகடைகள் 122 அலுவலகங்கள்110 ஏடிஎம் வசதி 2 உணவு விடுதி 2 காத்திருப்பு கூடங்கள்5 கழிப்பறை வசதி தண்ணீர் வசதி இருக்கக்கூடிய வகையில் இன்றைக்கு இந்த மார்க்கெட் நவீனமாக கட்டப்படும் நவீன வசதியோடு கட்டப்படும் எனவே இதை பொதுமக்களும் விவசாயிகளும் வணிக பெருமக்களும் நல்ல முறையிலே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டு இந்த அருமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நகராட்சி நகர்மன்ற தலைவர் துணைத்தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் அத்தனை பேருக்கும் மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மாண்புமிகு முதலமைச்சர் மக்களுடைய தேவைகளை எண்ணங்களை உணர்ந்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட மாண்பு மிகு முதலமைச்சருடைய அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் பெண்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள் விரைவிலே உங்களுக்கான திட்டம்1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன் என்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜோதீஸ்வரன்,ஒன்றிய குழு தலைவர்கள் அய்யம்மாள்,சத்திய புவனா,மாவட்ட அவைத் தலைவர் மோகன் காந்தி மார்க்கெட் முன்னாள் சங்க தலைவர்
சிவசக்திவேல் கவுண்டர் எஸ்.ஆர்.கே பாலு பொதுக்குழு உறுப்பினர். தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் வார்டு உறுப்பினர்கள் கருப்பாத்தாள் கருப்புசாமி அருள்மணி நாட்ராயன் செல்வராஜ் சாந்திஆறுமுகம் மற்றும் தி.மு.க மாவட்ட, ஒன்றிய,நகர கழகநிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை நிறைவில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மேலாளர் உமா காந்தி நன்றி தெரிவித்தார்.