மாநில தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பில் சோதனை கொள்முதல் மற்றும் செஸ்வரி மூலம் மனிதர்களிடமும் விவசாயிகளிடமும் வசூல் செய்யும் மத்திய மாநில அரசை கண்டித்து தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.அதைத்தொடர்ந்துசெய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவர் சௌந்தரராஜன் பேசுகையில் ;தமிழக அரசு சோதனை கொள்முதல் என்ற பெயரில் சிறு கடைகளில் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர், ஆனால் சிறு வணிகர்கள் கடையில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் இருப்பது என்பது மிகவும் கடினம் எனவும், வணிகர்களை நசுக்க பார்ப்பதாக கூறினார். அதேபோல, பொருள் மற்றும் சேவை வரி திட்டத்தின்படி சுழற் படை அதிகாரிகள் சோதனை என்கின்ற பெயரில் ஒரு வழிப்பறியை நடத்துகின்றன, மூன்று லட்சம் ஐந்து லட்சம் என அபராதம் வசூல் செய்கிறார்கள் எனவும் இந்த சுழற் படை சோதனை முறையை உடனடியாக ரத்து செய்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு வரியை தமிழகத்தில் கொண்டு வந்து சிறு வணிகர்களை வஞ்சிப்பதாகவும், உள்நாட்டு சில்லறை வணிகத்தை தமிழக அரசு அளிக்கின்ற செயலை செய்து கொண்டிருப்பதாக கூறினார்.வேளாண் விவசாய பொருட்களுக்கு விற்பனை கூடங்களுக்கு உள்ளே நடைபெறும் 100 சதவிகித சந்தை கட்டணத்தை இருந்ததை தமிழக அரசு ஆறு மாதங்களுக்கு முன்பாக அரசாணை 84 படி மார்க்கெட் உள்ளையும் வெளியிலேயும் விற்பனை செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு 100% அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும், முன்பு கருணாநிதி ஆட்சியில் இருந்ததை மாற்றி அவருடைய மகன் தற்போதைய முதல்வர் தமிழக அரசு தமிழக விவசாயிகள் வணிகர்கள் மற்றும் பொதுமக்களையும் பாதிக்கின்ற சொத்து வரி மின்சார வரி போன்ற மக்களிடம் வசூல் செய்வதையே குறிக்கோளாக செய்து கொண்டிருக்கிறார்கள் இவையெல்லாம் எதிர்த்து இன்று நடைபெறுவதாக தெரிவித்தார்.