விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை (சிலம்பம், கேரம், சாலையோர சைக்கிள் போட்டிகள்) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப.,அவர்கள்இன்று(19.01.2023)துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.சின்னப்பா அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பம் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் துவக்கி வைத்தார். தொடர்ந்து, விநாயக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கேரம் போட்டியினை துவக்கி வைத்தார்.அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான சிலம்பம், சாலையோர சைக்கிள் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2023) முதல் 22.01.2023 வரை 4 நாட்கள் கீழப்பழூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் விநாயக மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலிருந்தும் 2,660 மாணவ, மாணவிகள் வருகை புரிந்துள்ளனர்.மேலும், இப்போட்டிகள் 19.01.2023 மற்றும் 20.01.2023 ஆகிய இரு நாட்களும் மாணவிகளுக்கான சிலம்பம், சாலையோர சைக்கிள் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகளும், 21.01.2023 மற்றும் 22.01.2023 ஆகிய இரு நாட்களும் மாணவர்களுக்கான சிலம்பம், சாலையோர சைக்கிள் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் பங்குபெற வருகை புரிந்துள்ள மாணவ, மாணவிகள் மற்றும் அணி மேலாளர்களுக்கும் தனித்தனியே தங்குவதற்கு இடம் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.போட்டிகள் 14-வயதுக்குகீழ், 17-வயதுக்குகீழ், 19-வயதுக்குகீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெறுகின்றது. இதில் 14-வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள 228 மாணவர்களும், 228 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர். கேரம் போட்டியில் கலந்துகொள்ள 114 மாணவர்களும், 114 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர். சாலையோர சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள 38 மாணவர்கள், 38 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர்.இதில் 17-வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள 342 மாணவர்களும், 342 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர். கேரம் போட்டியில் கலந்துகொள்ள 114 மாணவர்களும், 114 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர். சாலையோர சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள 38 மாணவர்கள், 38 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர்.இதில் 19-வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ள 304 மாணவர்களும், 304 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர். கேரம் போட்டியில் கலந்துகொள்ள 114 மாணவர்களும், 114 மாணவிகளும் வருகை புரிந்துள்ளனர். சாலையோர சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள 38 மாணவர்கள், 38 மாணவிகளும் என ஆகமொத்தம் 2,660 மாணவ, மாணவியர்களும், 228 அணி மேலாளர்களும் போட்டியில் கலந்துகொள்ள வருகை புரிந்துள்ளனர்.விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் முனைவர்.ஆ.அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.சுமதி அசோகசக்கரவர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தனலெட்சுமி மருதமுத்து, உடற்கல்வி ஆய்வாளர் (பொ) திரு.குணசேகரன், பள்ளி தாளாளர்கள் திரு.கோவிந்தசாமி, திரு.ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.