ரூபாய் 77.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள்
![]()
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தந்தை பெரியார் அரசு பொரியல் கல்லூரியில் அமைப்பியல் துறை இரண்டாம் தளத்தில் ரூபாய் 77.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்களை நேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் மாநகர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், ஆகியோர் குத்து விளக்கு கேற்றினார்கள். உடன் கல்லூரி முதல்வர் முனைவர் அருளரசு, உள்ளார்.

