5.74 கோடி மதிப்பில் தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணி

Loading

5.74 கோடி மதிப்பில் தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்,  அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தக்கலை ஒன்றியத்திற்குட்பட்ட முளகுமூடு பேரூராட்சி, திக்கணங்கோடு. முத்தலக்குறிச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்,  அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள். பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முளகுமூடு பேரூராட்சி பகுதியில் தொகுத்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.3.46 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு. பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவறுத்தப்பட்டது.தொடர்ந்து, திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் பிரதான் மந்திரி இலவச வீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயனாளியின் வீட்டின் பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.11 இலட்சம் மதிப்பில் திக்கணங்கோடு தினசரி சந்தை வளாகத்தில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணிகள் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணியினையும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.14.75 இலட்சம் மதிப்பில் தெங்கன்குழி பகுதியில் கிராமப்புற வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியினையும், முத்தலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் கிராம சேவை மைய கட்டிடம் அருகில் ஆயத்த ஆடை அலகு || கட்டுமானப் பணியினையும், ரூ.14.34 இலட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி கிராம சேவை மைய கட்டிடத்தின் முதல் தளத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு கட்டிட பணிகளையும், ரூ.17.60 இலட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பிரிவு | முடிவுற்ற கட்டுமான பணிகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி சி.எஸ்.ஐ சர்ச் முதல் தக்கலை பேருந்து நிலையம் வரை மேம்படுத்தப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சம் மதிப்பில் முத்தலக்குறிச்சி பகுதியிலுள்ள ஜி.பி.நகரில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட்
சாலை பணியினையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், முத்தலக்குறிச்சி பகுதியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வாழை சிப்ஸ் உற்பத்தி பிரிவு கட்டிட பணியினையும், முத்தலக்குறிச்சி பகுதியில் ரூ.23.30 இலட்சம் மதிப்பில் வாழை மாவு உற்பத்தி பிரிவு கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.5.74 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டதோடு, அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு செய்தியாளர்கள் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இப்பயணத்தின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பாபு. செயற்பொறியாளர் திருமதி.ஏழிசை செல்வி, தக்கலை ஊராட்சி ஒன்றியத்தலைவர் அருள் ஆன்றனி, முத்தலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தசிம்சன். உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ) ரெஜினால்டு. திருமதி.மரிய தேவிகா (சாலைகள் மற்றும் பாலங்கள்), உதவி பொறியாளர்கள் திருமதி.ஜெனி (ஊ.வ), திருமதி.ஆனிலெட் ஷீஜா (ஊ.வ), தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராஜா ஆறுமுக நயினார் (வ.ஊ), அன்வு (கி.ஊ), அருளானந்த ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *