சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொழில்நுட்ப கல்லூரியின் விடுதி திறப்பு
ஊத்தங்கரையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொழில்நுட்ப கல்லூரியின் விடுதி திறப்பு*கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியில் 100 மாணவர்கள் எண்ணிக்கையுடன் துவங்க அரசாணை வரப்பட்டு உள்ளது அதனை தொடர்ந்து ஊத்தங்கரையில் மிகப் பிற்பட்டோர் நல தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் விடுதி கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமையில் தற்காலிக வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்டுள்ளது இந்த விடுதியில் மாணவர்களுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவு பட்டியலின் படி காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம், பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசையும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம் ,கூட்டு, சிக்கன், மட்டன், முட்டையுடன் பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது. மேலும் கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் இலவசமாக ஜமக்காலமும் ஆண்டுக்கு மூன்று இலவச மருத்துவ பரிசோதனையும் பற்பசை, சோப்பு, எண்ணெய், போன்றவை வாங்க கல்லூரி மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ. 150 தினமும் வழங்கவும். செய்தி படிக்க செய்தித்தாள்களும் கலைத் திருவிழா மற்றும் மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மதியழகன் ஒன்றிய பெருங்குளம் தலைவர் உஷாராணி குமரேசன் பேரூராட்சி தலைவர் அமானுல்லா கட்சி நிர்வாகிகள் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.