முகாம் இன்று (18.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்;டம், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மேலச்சொக்கநாபுரம்வருவாய்கிராமத்தில்மக்கள்தொடர்பு முகாம் இன்று (18.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அனைத்து பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையில், அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரில் சென்று நடத்தப்படும் முகாமே இந்த மக்கள் தொடர்பு முகாம். அரசின் திட்டங்கள் மற்றும் மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு விரைந்து அரசின் பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த ஒரு அரசின் திட்டமும் தமிழகத்திலுள்ள கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை திறம்பட செயல்படுத்தி, அதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். அதனடிப்டையில், தமிழக அரசு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்கள், ஆதரவற்றவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் (மகளிர் திட்டம்) மூலம் போதிய தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தொழில் தொடங்குவதற்கான அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறார்கள் அதனைப் போன்று, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு தமிழக அரசால் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தொழில் தொடங்குவதற்கு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம்” “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்”, “கலைஞரின் வரும் முன் காப்போம்” திட்டம், “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம” போன்ற பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்திடும் வகையில் “இல்லம் தேடிக்கல்வி திட்டம்” ஆரம்பப்பள்ளி பயிலுகின்ற மாணவ, மாணவியர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில் “எண்ணும் எழுத்தும்” திட்டம், நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு முதல்வரின் கனவுத்திட்டமான “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்பட்டு, வருகிறது. அதனைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து, அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கிடும் பொருட்டு, “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதனை கருத்தில் கொண்டு, வானவில் மன்றம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண் கல்வியை ஊக்குவித்திடும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தினை (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்); அரசுப்பள்ளிகளில் பயிலுகின்ற ஏழை மாணவ, மாணவியர்களின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்றைய தினம் நடைபெறும் இம்மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 155 பயனாளிகளுக்கு ரூ.7.02 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது. இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும். இம்முகாமில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பால்பாண்டி, மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் கா.கண்ணன் காளி ராமசாமி, துணைத்தலைவர் பஞ்சவர்ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியளர் (விவசாயம்) தனலெட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் இராஜராஜேஸ்வரி, வட்டாட்சியர் ஜலால், செயல் அலுவலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.