பெண்களுக்கு 30சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மின்சார வாரியத்தில் தொழிற்பயிற்சி முடித்தோர் நல சங்கம் சார்பில் சென்னை அண்ணா சாலை உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே பல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பின்னர் செய்தியாள ர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் அரசு தொழிற்பயிற்சி பயின்றவர்களை மின்வாரியத்தில் பணி வழங்கவில்லை என்றும் பெண்களுக்கு 30சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் இதுவரை சங்கத்தின் மூலம் பலமுறை அமைச்சர் அவர்களையும் செயலாளர்களையும் சந்தித்தும் எந்தவித பயனில்லை என்றும் தெரிவித்தார் மேலும் எங்களது கோரிக்கை தமிழக முதலமைச்சர் அவர்கள் பரிசளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவித்தார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் மகேந்திரன் மற்றும் செயற்கு உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி கார்த்திகா ஜெயராஜ் சண்முகம் கோபிநாத் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.