24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம்

Loading

24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம்மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் கே. மனோகரன், டி.கண்ணன் வரதராஜ் தயாரிக்கும் ஹாரர் படம் ‘சைத்ரா’. இதில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். படம் பற்றி ஜெனித்குமார் கூறும்போது, “பீட்சா , டீமான்டி காலனி மாதிரி வித்தியாசமான திரைக்கதையுடன் இதை உருவாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் நடந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம்” என்றார்.

0Shares

Leave a Reply