ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல்விழா.

Loading

ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல்விழா.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  ஒன்றியம் தங்கச்சிமாபட்டி ஊராட்சியில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் கே.வி. முருகானந்தம் தலைமையில் கொண்டாடப்பட்டது தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஊரக மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து ஊராட்சிகளிலும்  சாதிமதபேதமின்றி  அனைத்து மக்களும் ஒன்று கூடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு பின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்  இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஊராட்சி செயலர் மணிகண்டன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து  கோலப்போட்டி உள்ளிட்ட அனைத்து விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.வி. முருகானந்தம் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply