526 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும்

Loading

திருவள்ளூர் ஜன 15 : தமிழகத்தில் தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தைத்திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் இந்த பாரம்பரிய விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 கிராம ஊராட்சிகளிலும், 13.01.2023 அன்று பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள்  ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.ஒவ்வொரு ஊராட்சியிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என்ற வகையில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். 526 ஊராட்சிகளிலும் இன்று  (13.01.2023)  சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட வேண்டும். இந்நிகழ்வில் ஊராட்சியின் தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க செய்திட வேண்டும்.இந்த  நிகழ்வுக்கு முன்னதாக ஊராட்சி அலுவலகங்கள்,  ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் போன்றவை தூய்மை செய்யப்பட வேண்டும். அனைத்து தெருக்கள் மற்றும் அனைத்து கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கிராமத்தை தூய்மைப்படுத்தி “சுகாதாரப் பொங்கல்” கொண்டாடும் வண்ணம் பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும்.
கலைநிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றோரை பெருமைப்படுத்தப்பட வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் போன்ற ஊராட்சியின் அலுவலர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.கிராமிய மனம் கமழும் இந்த பொங்கல் திருநாள், சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றுக்கூடி நடத்திடும் பெருவிழாவாக நடத்தவும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக்கொள்ள வேண்டும்.சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள்,  சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாயம் சார்ந்த அமைப்பின் பிரதிநிதிகளும்,போட்டிகள் யாவும் கண்டிப்பாக மகளிர் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள வேண்டும். 2023-ஆம் ஆண்டில் மகளிர் நிலை, வரதட்சணை கொடுமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, சிசுவதை, சமூக இணக்கம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, குடிநீர் பிரச்சனை, இடம் பெயர்தல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், சமூகப் பிரச்சனைகளில் சுய உதவிக்குழுக்களின் தாக்கம், வறுமை, கல்வியறிவின்மை மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர்களின் சமூகக் கருத்துருக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்ளலாம்.சமத்துவ கருத்துருக்களை வலியுறுத்தும் வகையில் பேச்சு போட்டி, கோலப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்க்கச் செய்யும் வகையில் போட்டிகள் நடத்த வேண்டும்.மக்கள் அனைவரும் சமூக வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் அன்பையும் சமூக நல்லிணக்கத்தையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.  அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட வேண்டும்.கோலம், ரங்கோலி – கோலங்கள், போட்டிகள் மகளிரின் பிரச்சனைகள் விவரிக்கும் விதத்தில் இருத்தல் வேண்டும். போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி விளையாட்டு மைதானங்களில் நடத்தப்பட வேண்டும்.விவாத மேடை ,பேச்சுபோட்டி – போட்டிகள் மகளிர் தொடர்பான தலைப்புகளாக இருக்க வேண்டும். குழுபாட்டு – கிராமிய பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.5 நிமிடங்கள் கொண்டவையாக இருத்தல் வேண்டும். 5 நபர்கள் பங்கேற்க வேண்டும். தெருக்கூத்து  நாடகம் -நான்கு முதல் ஐந்து நபர்களைக் கொண்ட அணி கலந்து கொள்ளலாம். கால அளவு 20 நிமிடங்கள்.மேற்படி வழிமுறைகளை பின்பற்றி சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *