ஒளவை கழகம் வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடபட்டது.

Loading

மகமாயி அம்மாள் தங்கப்பநாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை ராயபுரம் சோமுசெட்டி தெருவில் உள்ள ஒளவை கழகம் வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடபட்டது.சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுபானையில் பச்சரிசி பொங்கல் வைத்து தலைவாழை இலையில் இட்டு அத்துடன் பழங்கள்,இனிப்பு வகைகள் கரும்பு முதலியவற்றை அர்ச்சித்து தூபம் தீபம் காட்டி நாடு வளம் பெற,விவசாயம் செழிக்க சூரியபகவானை வேண்டி பிரார்தனைகள் செய்தனர்.இந்நிகழ்வில் மகமாயி அம்மாள் தங்கப்பநாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு அனைவரும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வாழத்துகளை தெரிவித்துகொண்டனர்.
இதில் மகமாயி அம்மாள் தங்கப்பநாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.விழாவில் பங்குகொண்ட மகளிர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கபட்டது.
0Shares

Leave a Reply