திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தமிழ்த் துறை கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது :
திருவள்ளூர் ஜன 11 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சகுந்தலாம்மாள் நினைவு 12-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி போட்டிகள் நடைபெற்றது. தமிழறிஞர், எழுத்தாளர் கார்த்திக் சுப்பிரமணியன் (யுவபுரஸ்கார் விருத்தாளர்) சிறப்பு விருந்தினராக இருந்து குத்து விளக்கு ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.இதில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, களிமண் உருவ பொம்மைகள் செய்தல் போட்டி, கவிதைப் போட்டி, நடனப்போட்டி, குழு பாடல் போட்டி, மாறுவேடப் போட்டி என மாணவர்களுக்கும், கவிதை எழுதி வாசித்தல் மற்றும் பாட்டுப் போட்டி என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.42 நிலைகளில் நடைபெற்ற இப்போட்டியில் 2856 மாணவர்களும்,100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர் 100-க்கும் மேற்பட்ட நடுவர்கள் போட்டியாளர்களுக்கு நடுநிலையான தீர்ப்பினை வழங்கினர். ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் 252 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 21.01.2023 (சனிக்கிழமை) அன்று பரிசு வழங்கும் விழாவில் பரிசுத்தொகையும், கலாம் உலக சாதனைக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். கலாம் உலக சாதனைக்கான சான்றிதழை சிறப்பு விருந்தினர் பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி இயக்குனர் பரணிதரன், பள்ளி முதல்வர் டாக்டர்.ஸ்டெல்லா ஜோசப் மற்றும் தமிழ்த் துறையினர் பெற்றுக் கொண்டனர். விழாவினை தமிழ் ஆசிரியர்கள் கலையரசன் உமா மகேஸ்வரி பாய் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.இந்த உலக சாதனைக்காக தங்களது கடமையை செய்த ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.