தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முக மற்றும் அக மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்கள்

Loading

தமிழர் திருநாளாம் தைத்திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடனும், எழிச்சியுடனும் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1000/- ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு வழங்கியுள்ளார் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முகமற்றும் அக மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் (2023) விழாவை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1000/- ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (09.01.2023) சென்னை, தீவுதிடல், அன்னை சத்யா நகரில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு, ரூ.1000/-ரொக்கம் மற்றும் வேட்டி, சேலை ஆகிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7,47,538 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.79.08 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்புடன் ரூ.1000/-ரொக்கம், வேட்டி, சேலை அடங்கியுள்ளது.இன்றைய தினம் பண்டகசாலையின் நியாயவிலைக்கடையில் வண்டிக்காரன்தோட்டம் அட்டைதாரர்களுக்குகட்டுப்பாட்டிலுள்ளகொல்லம்பாளையமஈரோடு மாநகராட்சி, சிந்தாமணி கூட்டுறவு அட்டைதாரர்களுக்கு,1170 குடும்ப நியாயவிலைக்கடையில் 745 குடும்ப
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் 868 முழுநேர நியாய விலைக்கடைகளும், 319 பகுதி நேர நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1187 நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 7,46,097 எண்ணிக்கையில் வேட்டி, சேலைகளும், இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் 1,377 குடும்ப அட்டைதாரர்களுக்கு என மொத்தம் 7,47,474 எண்ணிக்கையில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழர் திருநாளாம் தைத்திருநாளை பொதுமக்கள் மகிழ்ச்சியுடனும், எழிச்சியுடனும் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரூ.1000/- ரொக்கத்துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை மற்றும் 1 முழுக்கரும்பு வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் என்பதில் சிறிதும் ஜயமில்லை.பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்ற கொல்லம்பாளையம், வண்டிக்காரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த திருமதி.கீதா, க/பெ சுரேஷ் பாபு, வயது 35, அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கையில்,எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். நான் வீட்டையும் குடும்பத்தையும் கவனித்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள் உள்ளார்கள். எனது கணவரின் வருமானத்தை கொண்டு குடும்பத்தையும் எனது
மகன்களையும் படிக்க வைப்பதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. கூலி வேலையும் எனது கணவருக்கு தொடர்ந்து கிடைப்பதில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதே மிகவும் கடினமாக இருக்கிறது. பொங்கலுக்கு மற்ற பொருட்கள் வாங்க என்ன செய்வதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அதன்படி, இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டேன். இந்த ரொக்கம் மற்றும் தொகுப்பு பொங்கலை கொண்டாடிட போதுமானதாக உள்ளது. எவ்வித கவலையுமின்றி பொங்கலை தித்திப்புடன் கொண்டாடிட கரும்புடன் பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் பகுதி பொதுமக்களின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்ற கொல்லம்பாளையம், தாயுமானவர் வீதியைச் சேர்ந்த திரு.ராஜமாணிக்கம், வயது 55, அவர்கள் மகிழ்ச்சியுடன்தெரிவிக்கையில்,நான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார். எனக்கு ஒரு மகன் உள்ளார். எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் வேலைக்கு சரிவர செல்ல முடியவில்லை. அதனால் மிகுந்த பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் பொங்கல் திருநாள் வருகிறது, எவ்வாறு கொண்டாட போகிறோம் என நினைத்திருந்த வேலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு எங்களுக்கு மிக இனிப்பான செய்தியாக இருந்தது. பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கைகளால் ரொக்கம் ரூ.1000/- உடன் பொங்கல் தொகுப்பு மற்றம் வேட்டி, சேலை பெற்றுள்ளேன். அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் மிகவும் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருந்தது. பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடிட ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கிய
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்ற கொல்லம்பாளைம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த திருமதி.ராமாயி, வயது 60, அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கையில்,
நான் கூலி வேலைக்கு சென்று, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வருகிறேன். எனது கணவர் இறந்து 10 வருடங்கள் ஆகிறது. எனக்கு 1 மகள் உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்த வருடம் தைத்திருநாளை கொண்டாடிட எனது மகளை வீட்டிற்கு அழைத்துள்ளேன். பொங்கலை கொண்டாடகையில் பணம் இல்லை என்று மனம் வருந்தி கொண்டிருந்த நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் ரூ.1000/- வழங்கப்படும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பை கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தற்போது, நான் ரொக்கம் ரூ.1000/- உடன் பொங்கல் தொகுப்பு மாவட்ட அட்சித்தலைவர் அவர்களின் திருக்கரங்களால் பெற்றுக்கொண்டேன். அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருந்தது. எவரையும் எதிர்பாராமல் நான் என் மகளுடன் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடிட வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக மகிழ்ச்சியுடன் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *